தனியாக ஒரு பாடலில் ஆட வேண்டும் என்ற ப்ரணிதாவின் நீண்டநாள் ஆசை விரைவில் நிறைவேற உள்ளது. உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ப்ரணிதா, சகுனி உட்பட இரண்டு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு படங்களில் தனியாக ஆட வேண்டும் என்று ஆசையாம். இந்த ஆசை ஆங்காராக என்ற கன்னட படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
ப்ரணிதா ஆடவுள்ள இந்த பாடலுக்கு அர்ஜூன் ஜன்யா இசையமைத்துள்ளார், பாடலைப் பாடி இருப்பவர் சாதனா சர்கம். இப்பாடலை குழந்தைகளுடன் தண்ணீரில் ஆடிப்பாடி மகிழும் வகையில் காட்சியமைக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளராம். கதாநாயகன் இல்லாத இப்பாடல், ஏறக்குறைய ரோஜாப் படத்தில் மதுபாலா ஆடிப்பாடும் சின்ன சின்ன ஆசை பாடல் போன்று இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நீண்டநாளாக தான் ஒரு பாட்டு தனியாக ஆட வேண்டும் என்று ஆசை அவருக்கு இருந்ததாம். அந்த ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேற இருப்பதால் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார் ப்ரணிதா.