விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு டாட்டா சொல்லி, விண்டோஸ் 2007க்கு மாறுபவர்கள், தங்கள் எம்.எஸ். ஆபீஸ் 2003க்கும் விடை கொடுத்து, ஆபீஸ் 2007 இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகின்றனர். இவர்கள் அனுப்பும் கடிதங்களில் கேட்டுள்ளவற்றில், முக்கிய சிலவற்றிற்கு டிப்ஸ்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
1. லேண்ட்ஸ்கேப் மற்றும் போர்ட்ரெய்ட் நிலைக்கு டாகுமெண்ட் மாற்ற: பெரும்பாலான டாகுமெண்ட்கள்
போர்ட்ரெய்ட் வடிவமைப்பில் அமைக்கப்பட்டு, அதே முறையில் அச்சடிக்கப்படுகின்றன. ஆனால், சிலவற்றை, எடுத்துக்காட்டாக, ஸ்கிரீன் பிரிண்ட் அவுட், கம்ப்யூட்டர் கோடிங் டெக்ஸ்ட், நீள வரிகள் கொண்ட டாகுமெண்ட் ஆகியவை லேண்ட்ஸ்கேப் முறையில் அச்சிட்டால்தான் முழுமையாக நமக்குக் கிடைக்கும். இந்த வடிவமைப்பிற்கு மாற, வேர்ட் 2007ல், மேலாக உள்ள ரிப்பனில், வியூ டேப் கிளிக் செய்திடவும். இதில் பேஜ் லே அவுட் என்ற பிரிவில் கிளிக் செய்து கிடைக்கும் பிரிவில், ஓரியண்டேஷன் என்று ஒரு ஐகான் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், நமக்கு கிடைக்கும் போர்ட்ரெய்ட் மற்றும் லேண்ட்ஸ்கேப் என இரு வடிவமைப்புகளில், தேவையானதைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
2. பார்மட் மாற்றாமல் டெக்ஸ்ட் ஒட்ட: வேர்ட் 2007ல் உள்ள Paste Special கட்டளையைப் பயன்படுத்தி டெக்ஸ்ட் ஒன்றை அதன் வடிவமைப்பு மாறாமல் ஒட்டலாம். நீங்கள் வேர்ட் அல்லது மைக்ரோசாப்ட் விண்டோஸ் புரோகிராம்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், அடிக்கடி டாகுமெண்ட்களுக்கிடையே, கட் அண்ட் பேஸ்ட் செயல்பாட்டினை மேற்கொண்டிருப்பீர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டை, குறிப்பிட்ட இடத்தில் ஒட்ட, எடிட் மெனுவில் பேஸ்ட் கட்டளையைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள்; அல்லது கண்ட்ரோல் + வி (CTRL + V) கீயினைப் பயன்படுத்தியிருப்பீர்கள். மைக்ரோசாப்ட் வேர்ட் 2007ல், அதே ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம். அல்லது, ரிப்பனில் ஹோம் டேப் கிளிக் செய்து, கிடைக்கும் கிளிப் போர்டு குரூப்பில், பேஸ்ட் கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும்.
3. வேறு பார்மட்டில் டெக்ஸ்ட்டை ஒட்ட: மேலே குறிப்பிட்ட டெக்ஸ்ட் ஒட்டுதலில் ஏற்படும் பிரச்னையைச் சமாளிக்க “Paste Special” கட்டளையைப் பயன்படுத்தலாம். இந்த வழியில், குறிப்பிட்ட டெக்ஸ்ட் எந்த பார்மட்டும் இல்லாமல் ஒட்டப்படும். ஒட்டப்படும் டெக்ஸ்ட்டுக்கு, ஒட்டப்படும் இடத்தில் உள்ள டெக்ஸ்ட்டின் பார்மட் அமைக்கப்படும். இதில் என்ன பிரச்னை எனில், நீங்கள் ஒட்டும் டெக்ஸ்ட்டில், அழுத்தமான அல்லது சாய்வாக எழுத்துக்களை அமைத்து பார்மட் செய்திருந்தால், அவையும் நீக்கப்படும். அவை வேண்டும் என நீங்கள் விரும்பினால், மீண்டும் அவற்றை அமைக்க வேண்டும். வேர்ட் 2007ல் இதனை எப்படி மேற்கொள்ளலாம் எனப் பார்க்கலாம். ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். கிளிப் போர்டு குரூப்பில், பேஸ்ட் பட்டன் கீழாக உள்ள சுட்டும் அம்புக் குறியினை கிளிக் செய்து, கிடைக்கும் பாப் அப் மெனுவில் உள்ள “Paste Special” என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Paste Special” டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இங்கு உங்கள் தேவைப்படி, “Unformatted Text” அல்லது “Unformatted Unicode Text” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.
இந்த செயலையே கீ போர்ட் மூலம் மேற்கொள்ள Alt + Ctrl + V அழுத்தவும். இங்கும் உங்கள் தேவைப்படி, “Unformatted Text” அல்லது “Unformatted Unicode Text” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும்.
4. ஆப்ஷன்ஸ் மெனு எங்கு தான் உள்ளது?: வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள் பலர் ஆப்ஷன்ஸ் மெனு எங்குள்ளது? என அறியாமல், தேடு தேடு என்று பல நாட்கள் தேடி வருகின்றனர். இவர்கள் மற்றவர்களிடம் கேட்பதும் கிடையாது. எங்காவது இருக்கும் எனத் தேடுவார்கள். இதற்குக் காரணம், முந்தைய வேர்ட் புரோகிராமில், பல செயல்பாடுகளை செட் செய்வதற்கு, நாம் செல்ல வேண்டிய இடம் ஆப்ஷன்ஸ் மெனு ஆகும். முன்பு டூல்ஸ் மெனுவில், ஆப்ஷன்ஸ் இறுதியாகக் காட்டப்படும். ஆனால், வேர்ட் 2007ல் இந்த இன்டர்பேஸ் முற்றிலும் மாறுபட்ட வகையில் தரப்பட்டுள்ளது. இதனைப் பெற,
1. மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமில், மேல் இடது பக்கம் உள்ள ஆபீஸ் பட்டனை அழுத்தவும்.
2. இங்கு கிடைக்கும் மெனுவில், கீழாக வலது பக்கம் “Word Options” இருப்பதைக் காணலாம். இங்கு வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் நம் விருப்பப்படி வேர்ட் புரோகிராமினை செட் செய்திட, Popular, Display, Proofing, Save, Advanced, Customize, AddIns, Trust Center, Resources, எனப் பல பிரிவுகள் இருப்பதைக் காணலாம்.
5.ரூலர் காட்டப்பட: வேர்ட் 2007 ல் உள்ள டாகுமெண்ட்களை எடிட் செய்கையில், நமக்கு நெட்டாகவும், படுக்கை வசத்திலும் ரூலர் அளவு கோடு தேவை. டாகுமெண்ட் லே அவுட், டேப் அளவு, பாரா இண்டெண்ட் அளவு ஆகியவற்றிற்கு இந்த ரூலர்கள் நமக்கு உதவும். வேர்ட் இன்ஸ்டால் செய்கையில், இவை மாறாநிலையில் காட்டப்படாது. நாம் செட் செய்தால் தான் இந்த ரூலர் கிடைக்கும். இதற்கு ரிப்பனில் வியூ (View) டேப் கிளிக் செய்திடவும். இங்கு “Show/Hide” குரூப்பில் “Ruler” என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளத்தை அமைக்கவும்.
6. பெரிய எழுத்தினைத் தரும் கேப்ஸ் லாக் (Caps Lock) அழுத்தப்பட்டுள்ளதா?: முந்தைய வேர்ட் தொகுப்புகளில், கேப்ஸ் லாக் அழுத்தப்பட்ட நிலையில் உள்ளதா என ஸ்டேட்டஸ் பாரில் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் நாம் தவறாக அனைத்து எழுத்துக்களையும் கேப்பிடல் லெட்டர் எனப்படும் பெரிய எழுத்துக்களாக அமைவதனைத் தவிர்க்கலாம். ஆபீஸ் 2007ல் இந்த ஸ்டேட்டஸ் பார் அமைப்பு மாறா நிலையில் தரப்படவில்லை. எனினும், இதனை நாம் அமைத்துக் கொள்ளலாம்.
1. ஸ்டேட்டஸ் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். உடன் ஒரு மெனு பாப் அப் ஆகி வரும். இதில், CAPS LOCK என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி, டாகுமெண்ட்டினை உருவாக்கும் போதும், எடிட் செய்திடும் போதும், ஸ்டேட்டஸ் பாரில், கேப்ஸ் லாக் கீ அழுத்தப்பட்டுள்ளதா எனக் காட்டப்படும்.
7. மெட்ரிக் அல்லது வேறு அலகு: வேர்ட் 2007ல் மெட்ரிக் அல்லது வேறு அலகுகளைப் பயன்படுத்தலாம். மாறா நிலையில் தரப்படும் அலகிற்க்குப் பதிலாக, வேறு ஒரு அலகினைப் பயன்படுத்தலாம். இதற்கு,
1. முதலில் ஆப்ஷன்ஸ் மெனு செல்லவும்.
2. இடது பக்க பிரிவில், “Advanced” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. கிடைக்கும் விண்டோவில், தொடர்ந்து கீழாகச் சென்று “Display” என்ற பிரிவிற்குச் செல்லவும். இங்கு “Show measurements in units of” என்று இருப்பதனை அடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் மெனு பாரினை இயக்கவும். இங்கு Inches, Centimeters, Millimeters, Points (a typography unit of measurement, 1/72 inch), Picas (a typography unit of measurement மற்றும் 12 points or 1/6 inch) என ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். இவற்றில் நீங்கள் விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கவும். மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களே செயல்பாட்டில் இருக்கும். இவற்றை மீண்டும் மாற்ற எண்ணினால், மேலே தரப்பட்டுள்ளபடி மீண்டும் சென்று மாற்றலாம்.
8. தானாக புல்லட் மற்றும் எண்கள் லிஸ்ட் அமைப்பது: வேர்ட் டாகுமெண்ட் தயார் செய்திடுகையில், நாம் ஒன்று, இரண்டு என எண்களிட்டு வாக்கியங்கள் அமைத்தாலோ, அல்லது முக்கிய வரிகளை அடையாளமிட்டாலோ, வேர்ட், அவற்றில் தானாகவே எண்களை அல்லது புல்லட்களை அமைக்கும். டாகுமெண்ட் தயாரிப்பதில், இது நமக்கு பெரும் உதவியாக இருக்கும். இது மாறா நிலையில் இயங்கும்படி அனைத்து வேர்ட் புரோகிராம்களிலும் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் இந்த செயல்பாட்டினை விரும்ப மாட்டார்கள். தங்கள் விருப்பப்படியே, இது அமைக்கப்பட வேண்டும் என விரும்புவார்கள். அவ்வாறு செட் செய்திட, வேர்ட் 2007ல் என்ன செட் செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம்.
1. முன்பு கூறியபடி, ஆப்ஷன்ஸ் மெனுவிற்குச் செல்லவும்.
2. இடது பக்க பிரிவில் “Proofing” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இங்கு “AutoCorrect options” என்ற பிரிவிற்குக் கீழாக “AutoCorrect Options” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
4. இனி, “AutoCorrect” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.
5. இதில் “AutoFormat As You Type” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
6. “Apply as you type” என்பதற்குக் கீழாக, “Automatic bulleted lists” மற்றும் “Automatic numbered lists” என்பனவற்றின் முன் உள்ள பெட்டிகளில் டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
7. மாற்றங்களை சேவ் செய்திட ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.