கர்பகாலத்தில் அழகைப் பற்றி கவலைப்படும் பெண்கள்

பொதுவாக ஆண்களை விட பெண்கள், தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகம் விரும்புவர். அதற்காக அவர்கள் பல கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருப்பது, வெயில் பட்டால் தோல் கறுத்து விடும் என்பதால், வெளியில் செல்லாமல் தவிர்ப்பது என பல்வேறு தியாகங்களை செய்து தங்களை அழகாக
வைத்துக் கொள்ள முயற்சிப்பர்.

இந்த நிலையில், ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் பல்வேறு கவலைகளில், அவளது அழகு பறிபோகுமே என்ற கவலை மேலோங்கி நிற்கிறது.

வயிறு மற்றும் கால் தொடை பகுதிகளில் சரும சுருக்கம் மற்றும் வடுக்கல், தொங்கிய மார்பகம், வயிறு பெருத்தல் போன்றவற்றால், அழகு குறைந்து விடுமோ என்று பல பெண்கள் கவலை கொள்கின்றனர். அதனால், வயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் வடுக்கல் வராமல் இருக்க கர்பமுற்றிருக்கும் போதே பல கிரீம்களையும் தடவுகின்றனர்.

மார்பகங்கள் தொங்கி அழகு குறைந்து விடும் என்று குறுகிய காலத்திலேயே குழந்தைக்கு புட்டிப் பால் கொடுக்கத் துவங்குகின்றனர்.

ஆனால், குழந்தைப் பேறு என்பது  பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான விஷயமாகும். அதனை தாய்மையோடு அணுகி, ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்து, அந்த மகிழ்ச்சியை உணரும் பெண்மை நிச்சயம் அழகோடுதான் காட்சியளிக்கும் என்பதை பெண்கள் மறக்கக் கூடாது.

பெண்களோ, அழகு அழகு என்று தோலின் கவர்ச்சியை மட்டுமே நினைக்கிறார்கள். அது குழந்தை பிறந்தாலும், பிறக்காவிட்டாலும், சில காலத்தில் சுருங்கித்தான் போகப்போகிறது. அழகு என்பது, பெண்களின் வெளித்தோற்றத்தில் இல்லை, அது அவர்களது பழகும் விதம், பேசும் விதம், குணம் ஆகியவற்றில்தான் உள்ளது.

ஒரு குழந்தையைப் பெறுவதால் எந்த வகையிலும் அழகு குறைந்துபோகாது. அவள் தாய்மை அடையும் போது நிச்சயம் அழகுக் கூடும். அது தாய்மை என்ற அழகு. மேலும், குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்கும் போது, அந்த குழந்தையின் அழகில், அவளது தாயைக் காண முடியும். குழந்தை பண்போடும், நல்ல பழக்க வழக்கத்தோடு நடக்கும் போது, அதிலும், ஒரு பண்பான தாயின் அழகு வெளிப்படும்.

எனவே, தாய்மை அடையப் போகும் உணர்வை மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டியது கர்ப்பிணியின் கடமையாகும். அதுவே, அவளையும், அவளது குழந்தையையும் ஆரோக்கியமாக இருக்க வழி செய்யும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget