Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.
Hard Disk: (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறை யாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.