தாய்பால்தான் பிறந்த குழந்தையின் முதல் உணவு. இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஆனால் தாய்பால் கொடுக்காமல் தவிர்க்கின்றனர் தாய்மார்கள்.
இதனால் ஏராளமான சிசுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியின்றி பாதிப்புக்கு ஆளாகின்றனர். தாய்பாலின் நன்மைகளை எடுத்துக்கூறும் விதமாகவும் தாய்பால் கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல்வாரம் தாய்பால் விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் 120 நாடுகள் சர்வதேச தாய்ப்பால் வாரத்தை கடைபிடிக்கின்றன
தாய்பால் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது, தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகளுக்கு புத்தி கூர்மை அதிகமாக இருக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற எந்த உணவிலும் இல்லாத அளவிற்கு, தாய்ப்பாலில்தான் அதிகச் சத்துக்கள், என்சைம்ஸ், ஹார்மோன்ஸ், வளர்ச்சி காரணிகள், விட்டமின் சத்துக்கள், நோய் எதிர்ப்பு சக்தி எல்லாம் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து, குறைந்தது ஆறு மாதம் வரையிலாவது, கண்டிப்பாக தாய்ப்பால் புகட்டல் வேண்டும்.
குறைவான காலம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளை விட, அதிக காலம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் நீண்டகாலம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். இதனால் தாய்க்கும் பல நன்மைகள் உண்டு.
நீண்டகாலம் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் அதிக புத்திக் கூர்மையுடன் இருந்தது, பல்வேறு கட்டங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருந்தது. எனவே, தாய்மார்கள் தங்களது குழந்தைகள் புத்திசாலிகளாகவும், ஆரோக்கியமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினால், குறைந்தது 2 ஆண்டுகளுக்காவது தாய்ப்பால் கொடுக்கலாம்.
தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் உணவில் அதிக அளவில் பருப்பு சேர்த்துக்கொள்ளுதல் அவசியம். அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை, மீன் நிறைய சாப்பிடலாம். ட்ரை ப்ரூட்ஸ், நட்ஸ், முந்திரி, பாதாம் போன்றவை சாப்பிடுவதும் பால் சுரப்பிற்கு உதவிடும்.
பால் சுறா மீன் அல்லது கருவாடு சமைத்து அடிக்கடி சாப்பிடவும். பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதும் பால் அதிகம் சுரக்க வழி செய்யும். பூண்டினை நறுக்கி நெய்யில் வறுத்து, சிறிதளவு சாதத்துடன் சேர்த்து தினமும் சாப்பிடலாம். இதைத் தவிர தினமும் குறைந்தது முக்கால் லிட்டர் பசும்பால் குடித்தல் வேண்டும்.
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் நன்மை தரக்கூடியது. பாலூட்டுதல் தாய்மார்களுக்கு ஒரு சுகமான அனுபவமாக இருப்பதோடு, குழந்தையுடனான பிணைப்பினை அதிகரிக்கவும் செய்கிறது.
குழந்தை பெற்ற ஒவ்வொரு தாய்மார்களும் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பது மிகப்பெரிய உன்னதமான கடமையாகும். இதிலிருந்து தவறக்கூடாது. ஆனால் இன்றைக்கு உள்ள இளம் பெண்களுக்கு ஒருவார காலத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது என்பதுதான் வேதனை.