உங்களிடம் உங்கள் அப்பா பயன்படுத்திய பழைய எக்ஸ்பி அல்லது விண்டோஸ் 98 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டராக இருந்தாலும், அல்லது புதிய கம்ப்யூட்டராக விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இருந்தாலும், சில பிரச்னைகள் எல்லா வகை கம்ப்யூட்டர் செயல்பாட்டிலும் இருப்பதாக நாம் உணர்வோம். சில
உண்மையிலேயே பிரச்னைகளாக இருக்கும். சில நாமாக எண்ணிக் கொள்பவையாக இருக்கும். இங்கு அத்தகைய பிரச்னைகள் குறித்தும், அவற்றிற்கான தீர்வுகள் சார்ந்தும் சில தகவல்களைப் பார்க்கலாம்.
முதலில் இதனை முயற்சிக்க: எந்தக் கம்ப்யூட்டராக இருந்தாலும், சிக்கல் கொடுப்பது எந்த புரோகிராமாக இருந்தாலும், அவற்றை மூடி, மீண்டும் இயங்க வைத்தால், எந்தப் பிரச்னைக்கும் தீர்வாக அது அமையும். கம்ப்யூட்டர் சிஸ்டம் செயல்பாட்டில் பிரச்னை என்றால், கம்ப்யூட்டர் இயக்கத்தினை முழுமையாக நிறுத்தி, மீண்டும் இயங்க வைப்பது நல்லது. அதே போல, கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட துணை சாதனமாக இருந்தால், அதன் இயக்கத்தினையும் நிறுத்தி, கம்ப்யூட்டர் இணைப்பையும் எடுத்துவிட்டு, பின்னர் இணைத்துச் செயல்படுத்திப் பார்க்கவும்.