வளரும் நாடுகளில் உயர்ந்து வரும் ஸ்மார்ட் போன் பயன்பாடு மற்றும் அனைவரும் வாங்கும் விலையில் ஸ்மார்ட் போன்களின் வருகை ஆகியவற்றால், நடப்பு 2013 ஆம் ஆண்டில், ஸ்மார்ட் போன்களின் விற்பனை 100 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் என்று இதனைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு அறிவித்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டைக் காட்டிலும் 40% கூடுதலாகும். முந்தைய ஆண்டைக் காட்டிலும் 7.3% கூடுதலாக விற்பனை ஆகும் எனவும் தெரிவித்துள்ளது.
பயனாளர்களில் பலருக்கு, ஸ்மார்ட் போன்கள் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறி உள்ளது. 2017 ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில், மொபைல் போன்கள் என்றால், அவை ஸ்மார்ட் போன்களாக மட்டுமே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.