நகத்தை பராமரிப்பது எப்படி

பல‌ர் முக‌த்தை அழகா‌க்‌கி‌க் கொ‌ள்வ‌தி‌ல் ‌நிறைய கவன‌ம் செலு‌த்துவா‌ர்க‌‌ள். ஆனா‌ல் நக‌ங்களை கவ‌னி‌க்காமலே ‌வி‌ட்டு‌விடுவா‌ர்க‌ள். அக‌த்‌தி‌ன் அழகு
முக‌த்‌தி‌ல் தெ‌ரிவது போல, உட‌ல்‌நிலையை நா‌ம் நக‌த்‌தி‌ல் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளலா‌ம். ஏ‌ன் எ‌னி‌ல் உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளை நக‌ம் நம‌க்கு எடு‌த்து‌க் காட‌்டு‌கிறது.

நகங்களை பராமரித்து அழகுபடுத்தும் முறைகள்

* மருதாணி இலைகளை அரை‌த்து வை‌க்க‌ப்படு‌ம் மரு‌தா‌ணி ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ல்ல பயனை அ‌ளி‌க்‌கிறது.

* அதனை முடி‌ந்தா‌ல் செ‌ய்து வரலா‌ம். ‌சில‌ர் அடி‌க்கடி நக‌ப்பூ‌ச்சை பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். இது ‌மிகவு‌ம் தவறு. மாத‌த்‌தி‌ல் ஓ‌ரிரு நா‌ட்களாவது நக‌ங்க‌ள் கா‌ற்றோ‌ட்ட‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம். அ‌ப்போதுதா‌ன் அத‌ன் உ‌ண்மையான த‌ன்மையை நா‌ம் அ‌றிய முடியு‌ம்.

* மேலு‌ம், நக‌ங்க‌ள் கா‌ய்‌ந்து வற‌ண்ட த‌‌ன்மையுட‌ன் இரு‌ந்தா‌ல் அத‌ற்காக ந‌ல்ல மா‌ய்‌ச்சுரைஸ‌ர் ‌க்‌ரீ‌ம்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ‌சிற‌ந்தது.

* சிலருக்கு நக‌ங்களே வளராம‌ல் கு‌ட்டையாகவே இரு‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்க‌ள் கை ‌விர‌ல்களு‌க்கு மசா‌ஜ் அ‌ளி‌த்து வ‌ந்தா‌ல், நக‌ங்க‌ளி‌ல் வள‌ர்‌ச்‌சி ஏ‌ற்படு‌ம்.

* அழகு ‌நிலைய‌ங்களு‌க்கு‌ச் செ‌ன்று பெடி‌க்யூ‌ர், மெ‌னி‌க்யூ‌ர் போ‌ன்றவ‌ற்றையு‌ம் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். இதுவு‌ம் ‌விர‌ல் நக‌ங்களு‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.

* சிலருக்கு கை நகங்களில் மஞ்சள் நிறம் படிந்திருக்கும். சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான எலுமிச்சையை, இரவில் படுக்கும் போது நகங்களில் தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கழுவினால், நகங்களில் படிந்திருக்கும் மஞ்சள் நிறமானது எளிதில் நீங்கிவிடும்.

* குறிப்பாக இந்த முறையை தொடர்ந்து நான்கு வாரங்கள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget