மீண்டும் கலக்க வரும் சமந்தா

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவருக்கும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நடிகர்
நாகசைதன்யாவுக்கும் இடையே காதல் என கடந்த சில மாதங்களாக செய்திகள் பரவின. இருந்தாலும் இருவரும் இதுவரை அதை மறுக்கவில்லை. இவர்களிருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், திருமணத்தை அடுத்த வருடத்திற்குத் தள்ளி வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின. அதனால், சமந்தா தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவெடுத்தார். அதையடுத்து தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் விஷால் ஜோடியாக 'இரும்புத் திரை' படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.

சிவகார்த்திகேயன், சமந்தா ஜோடியாக நடிக்க உள்ள படத்தை பொன்ராம் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம்தான் ஆரம்பமாக உள்ளது. மித்ரன் இயக்கத்தில் விஷால், ஆர்யா, சமந்தா நடிக்கும் 'இரும்புத் திரை' படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் ஆரம்பமானது. இப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சமந்தா கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

சமந்தா நடித்து கடைசியாக தெலுங்கில் 'ஜனதா கேரேஜ்' படம் வெளியானது. இப்படத்தில் சில மாதங்களுக்கு முன்பே அவர் நடித்து முடித்துவிட்டார். அதன் பின் ஓய்வில்தான் இருந்தார். இப்போது ஓய்வை முடித்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget