அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்க வைக்கிறது ஒரு புதிய செய்தி. கூகுளின் கீழ் இயங்கும் யூடியூப், ஒரு நாளைக்கு 4 பில்லியன் வீடியோ வியூவை பெற்று இருக்கிறது. அந்த அளவுக்கு யூடியூப் வீடியோ பார்வையாளர்களை கவர்ந்து, முடி சூடா மன்னன் என்ற பெயரையும் இதன் மூலம் பெறுகிறது.
இந்த அளவு பார்வையாளர்களை பெற்றதற்கு காரணம், நிறைய தொழில் யுக்திகளை யூடியூபுக்காக கூகுள் பயன்படுத்தி இருப்பது தான். உதாரணத்திற்கு ஸ்மார்ட்போன், டேப்லட்,
தொலைக்காட்சி போன்றவற்றின் மூலமும் யூடியூபை பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் மூலம் வாய்ப்பை கூகுள் ஏற்படுத்தியது தான், இதற்கு முக்கிய காரணம்.
இதனால், யூடியூப் வருவாய் ஏகபோகத்துக்கும் அதிகரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போனில் கூட இந்த யூடியூப் வசதியை பயன்படுத்தலாம் என்பதால், பயன்படுத்துவோரது எண்ணிக்கை அதிகமாகி உள்ளது.
2006-ஆம் ஆண்டு ₨ 82.9 ($1.65) பில்லியனுக்கு யூடியூப்பை வாங்கிய கூகுள், இதன் மூலம் அதிக பார்வையாளர்களை பெற்று பெரிய சாதனையை செய்துள்ளதாகவும் கூறலாம். ஒரு நிமிடத்திற்கு 60 மணி நேரம் யூடியூப் வீடியோ பயன்படுத்தப்படுகிறது. தொழில் ரீதியில் நிறைய நுட்பங்களை கையாள வேண்டும் என்ற ஒரு பெரிய விஷயத்தை
இங்கு யூடியூப் நிரூபித்தும் இருக்கிறது.