நடிகர்கள் கமல், அஜீத் உள்ளிட்டோருடன் நடித்தவரும், ஒரு காலத்தில் பிரபல மாடலாகத் திகழ்ந்தவருமான பாடகி வசுந்தரா தாசுக்கு ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரோபெர்டோ நாராயன் என்பவரை, மங்களூர் அருகே கோடீஸ்வர் பீச் பகுதியில் இவர் திருமணம் செய்து கொண்டாராம்.
இதில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
வசுந்தரராதாசும், ரோபெர்டோ நாராயனும் நீண்ட நாட்கள் நண்பர்களாக பழகி வந்தனர். இருவரும் ஒன்றாக வசித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த உறவை இப்போது திருமணம் இருவரும் நிரந்தரமாக்கிக் கொண்டனர் என்று வசுந்தராவின் நண்பர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்த வசுந்தரா விடம் கேட்டபோது, "ரோபெர்ட்டோவுடன் எனக்குள்ள தொடர்பு என்பது எங்களுக்குள்ள சொந்த விஷயம். அது பற்றி பொதுவில் விவாதிக்க விரும்பவில்லை. நானும் ரோபர்டோவும் இணைந்து ஸ்டூடியோ வைத்துள்ளோம். இணைந்து வேலை செய்கிறோம். மற்றவற்றை வெளியில் சொல்ல வேண்டியதில்லையே," என்றார்.