2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம்.
என்ன, சில நேரங்களில் சனி கண்ணை மறைப்பார். பிளாட் அப்ரூவல், மற்ற விஷயங்கள்
எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், ஏழரைச் சனி, சில நேரத்தில் போன ஜென்மத்தில் யாரையாவது நாம் ஏமாற்றி இருந்தால் அவன் ஏதாவது போலி டாக்குமெண்டை காண்பித்து காசு வாங்கிக் கொண்டு ஓடிவிடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அதனால், முன் பணம் கொடுக்கும் போதும், பத்திரப் பதிவு செய்யும் போதும் வாரிசுதாரர்கள் எல்லாம் கையெழுத்து போட்டுவிட்டார்களா என்பதையெல்லாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனென்றால், முதல் தாரத்தின் பையன் கையெழுத்து போட்டுவிட்டான், 2வது தாரத்தின் பையன் அயல்நாட்டில் இருக்கிறான் என்பதை மறைத்துவிட்டார்கள். வாங்கி இரண்டு வருடம் கழித்து வந்து தகராறு செய்து, எனக்கு 10 லட்சம் கொடுத்தால்தான் இந்த வீட்டில் இருக்க விடுவேன். இல்லையென்றால் வழக்கு தொடருவேன் என்பது போன்ற பிரச்சனைகள் ஏழரைச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும். இதையெல்லாம் சட்ட ரீதியாக தெளிவுபடுத்திக் கொண்டு வாங்கினால் ஒரு பிரச்சனையும் கிடையாது.