புதிய மென்பொருளுடன் ஏசர் டேப்லெட்டுகள்


உயர்தர லேப்டாப்புகள், மேசைக் கணினிகள் போன்றவற்றிற்கு ஏசர் உத்திரவாதம் வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும். இப்போது உலக அளவில் ஏசரின் புதிய ஏசர் ஐகோனியா டேப் எ500 டேப்லெட்டுக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த புதிய லேப்டாப் வரும் ஜனவரி மாதம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டேப்லெட்
ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்விஜ் இயங்கு தளத்தைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.


அதுபோல் இந்த புதிய ஐகோனியா டேப்லெட்டில் 2 புதிய சாப்ட்வேர் அப்டேட்டுகளும் வர இருக்கின்றன என்று இணைய தளங்கள் பரபரப்பான தகவல்களை வழங்குகின்றன. இந்த சாப்ட்வேர்கள் டேப்லெட்டின் வேகத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சாப்ட்வேர்கள் என்னவென்றால் அவை 7.014.01 மற்றும் 7.014.02 ஆகும்.
இந்த சாப்ட்வேர்களின் மொத்த மெமரி அளவு 10 எம்பிக்கு குறைவாக இருக்கிறது. மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்விஜ் இயங்கு தளத்தில் இயங்கும். அதனால் இந்த டேப்லெட் பலரின் எண்ணங்களையும் கருத்தையும் கவரும் என நம்பலாம்.
இந்த புதிய ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தைத் தாங்கிவரும் ஏசர் ஐகோனியா டேப் எ 500/501 மற்றும் ஏசர் ஐகோனியா டேப் எ 100/101 ஆகியவை விற்பனையில் பெரிய சாதனையைப் படைக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த புதிய டேப்லெட்டுகளின் அறிமுகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லையென்றாலும் ஏசருக்கு நல்ல பெயர் இருப்பதால் இந்த புதிய டேப்லெட்டுகளுக்கு இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget