சிலிம் மொபைல் போன்ற மேனியும், ஒயின் தயாரிக்கும் பெரிய விழிகளுமாக பித்து பிடிக்கவைக்கிறது பிந்து மாதவியின் அழகு. இவரது அழகுக்கு பட வாய்ப்புகள் தானே புயலாய் வேகம் எடுக்க வேண்டும்தான். என்ன செய்ய ஒன்று, இரண்டு என நத்தையின் வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கிறது வாய்ப்புகள். இருக்கட்டும் இருக்கட்டும். ஆரம்பத்தில் காஜல் அகர்வாலுக்கும் இதே நிலைதான். ஆனால் இன்று அகர்வாலின் சம்பளம் கோடிகளை தொட்டுவிட்ட அளவிற்கு செம பிஸி. அந்த இடம் பிந்துவுக்கும்
கிடைக்கும் என்று சொல்கின்றனர் கோடம்பாக்க விசிறிகள்.
‘வெப்பம்’ படத்திற்கு பிறகு கிருஷ்ணா ஜோடியாக ‘கழுகு’ படத்தில் நடித்துள்ளார் பிந்து. அதனைத்தொடர்ந்து ‘வல்லினம்’ படத்தில் ஒப்பந்தமானவரை பாதியிலேயே கழற்றிவிட்டனர். இந்த கவலையில் இருந்தவருக்கு கற்கண்டு வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமியின் ‘நீர் பறவை’ படத்தில் விஷ்ணு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிந்து மாதவி.
படத்திற்காக எத்தனையோ நாயகிகளை பார்த்தும் திருப்தி இல்லாத சீனுராமசாமிக்கு பிந்துமாதவியின் கண்கள் கவர்ந்திழுக்க, பிந்துமாதவியை நீர்பறவையின் நாயகியாக்கிவிட்டார். “பிந்து மாதவியின் கணகள் நான் எதிர்பார்க்கும் பாவங்களை வெளிப்படுத்துவதாக இருந்ததால் அவரை தேர்வு செய்தேன். இம்மதம் இரண்டாவது வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்கிறார் இயக்குனர் சீனுராமசாமி.