சொத்து காப்பீடு - Property insurance


இல்லியானஸ் இல்லத்தை பாதித்த இந்த புயல் கடவுளின் செயல் என்று காப்பீட்டு செயல்முறைகளுக்காக அழைக்கப்படும்
சொத்துக் காப்பீடு அசம்பாவிதங்களில் இருந்து சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. உதாரணமாக தீ, திருட்டு, வானிலை சேதாரம் ஆகியவை. இது சிறப்பு வகையான காப்பீடை
உள்ளடக்கியது., அதாவது தீக் காப்பீடு, வெள்ளக் காப்பீடு, பூகம்பக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, உள்நாட்டு கடல் காப்பீடு,அல்லது கொதிகலன் காப்பீடு.
  • வாகனக் காப்பீடு, யு.கே.வில் மோட்டார் காப்பீடு என்று அழைக்கப்படுகிறது.இது தான் சாதாரணமான காப்பீட்டு வடிவம். மேலும் இது வாகனத்தின் சேதாரம் மற்றும் ஓட்டுனருக்கு எதிரான சட்டபூர்வமான வாகனத்திற்கான ஈட்டுத்தொகை பெறுதல் ஆகிய இரண்டையும் கவனித்துக்கொள்கிறது. சட்டப்பூர்வமாக பொதுச்சாலைகளில் வாகனங்களை ஓட்ட அமெரிக்கா முழுவதும் வாகனக் காப்பீட்டுப் பாலிசி அவசியமாகிறது சில சட்டதிட்டங்களில் வாகனவிபத்துக்கு இரையானவர்கள் உடல் காய இழப்பீடு குற்ற மற்ற முறையாக மாற்றப்பட்டது.இது இழப்பீடுக்காக தாக்கல் செய்வதை குறைக்கிறது அல்லது நீக்குகிறது ஆனால் தன்னிச்சையாக நன்மைகள் பெரும் தகுதி அளிக்கிறது. கிரெடிட் அட்டை நிறுவனங்கள் வாடகை வாகனங்களுக்குகான சேதாரத்திற்கு காப்பீடு செய்கிறதது
  • ஓட்டுனர் பயிற்சி பள்ளிக் காப்பீடு.எந்த அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனருக்கும் பயிலும்போது காப்பீடு அளிக்கிறது மற்ற வாகன பாலிசிகளைப்போல் அல்லாமல் ஓட்டக் கற்றுக் கொடுப்பவர் மற்றும் பயில்பவர் இருவரும் சமமாக காப்பீடு பெற்றுக் கொள்ளும் வழி செய்கிறது.
  • ஆகாய விமானக் காப்பீடு.ஹால்,ஸ்பைர்ஸ் , டிடக்டிபில்ஸ் ,ஹால் தேய்மானம் மற்றும் பல சேதாரங்களுக்கு.
  • கொதிகலன் காப்பீடு. விபத்தால் உடல் சேதாரம் முதல் சாதனம் அல்லது இயந்திரம் வரை காப்பீடு தருகிறது.
  • பில்டர் சேதாரக் காப்பீடு கட்டடம் கட்டும்போது உடலுக்கோ அல்லது சொத்துக்கோ சேதாரம் வரும்போது காப்பீடு அளிக்கிறது. இந்தக் காப்பீடில் காரணம் எதுவானாலும் எல்லா அசம்பாவிதங்கலும் இதன் கீழ் சேர்த்துக் கொள்ளப்படுகிறது
  • பயிர்க் காப்பீடு "விவசாயிகள் இந்தக் காப்பீடை வளரும் பயிர்கள் சம்பந்தமான பலவித அசம்பாவிதங்களை சமாளிக்கவும் அல்லது குறைக்கவும் பயன்படுத்துகிறார்கள் அவைகள் பயிர் இழப்பு அல்லது வானிலையால் உண்டாகும் சேதாரம், புயல் ,வரட்சி, பனி சேதாரம் ,பூச்சிகள் அல்லது நோய் போன்றவைகளை உள்ளடக்கியது.
  • பூகம்பக் காப்பீடு பூகம்பத்தினால் சொத்துக்களுக்கு சேதாரம் உண்டாகும்போது பாலிசி தாரருக்கு காப்பீடு வழங்க உண்டாக்கப்பட்ட ஒரு வகைக் காப்பீடு. சாதரண வீட்டுக்காரர்களுக்கு காப்பீட்டுப் பாலிசி பூகம்ப காப்பீடு தராது . இந்த வகைக் காப்பீடுகள் நிறைய கழித்துவிடுகின்றன. தொகை இடத்தையும், அதன் தீவிரத்தையும் , வீடு கட்டப்பட்ட விதத்தையும் பொறுத்தது
  • தற்காப்பு பத்திரம் .குறிப்பிட்ட நபர்களின் துரோகத்தால் / ஏமாற்று நடவடிக்கைகலின் விளைவால் உண்டாகும் இழப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாலிசி தாரர்களுக்கு ஏற்ப்படுத்தப்பட்ட ஒருவகை விபத்துக் காப்பீடு. இது வழக்கமாக வியாபாரத்தை, அதன ஊழியர்களின் விசுவாசமற்ற செயல்களால் உண்டாகும் இழப்பில் இருந்து காக்க செய்யப்படும் காப்பீடு.
  • வெள்ளக் காப்பீடு வெள்ளத்தால் சொத்து இழக்கும்போது பாதுகாப்பு அளிக்கிறது.அமெரிக்க நாட்டில் சில இடங்களில் பல காப்பீட்டாளர்கள் வெள்ளக் காப்பீடு தருவதில்லை.இதன் விளைவாக அரசாங்கம் தேசிய வெள்ளக் காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கி காப்பீட்டாளர் சேவையைச் செய்கிறது.
  • வீட்டுக் காப்பீடு அல்லது வீட்டு சொந்தக்காரர்கள் காப்பீடு; "சொத்துக் காப்பீடைப் பார்க்கவும்.
  • நிலக்கிழார் காப்பீடு இது குறிப்பாக, தனக்கு சொந்தமான சொத்தை வாடகைக்கு விடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.இங்கிலாந்தில் நிறைய வீட்டுக் காப்பீடுகள் வாடகைக்கு விடப்படும் சொத்துக்களை மதிப்பதில்லை.அதனால் நிலக்கிழார்கள் கட்டாயமாக இந்த சிறப்புக் காப்பீட்டை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • கடல் சார்ந்த காப்பீடு மற்றும் சாமான் காப்பீடு. கடலில் கப்பல்களுக்கு உண்டாகும் சேதாரம் அல்லது உள்நாட்டு நீர்வழி கலங்கள் மற்றும் அதில் உள்ள சாமான்களுக்கு சேதாரம் அல்லது இழப்புகளுக்கு ஈடு செய்வது. சாமான்களுக்கு சொந்தக் காரரும் ,சாமான்களைக் கொண்டு செல்பவரும் வேறு வேறு நிறுவனமானால், சாமான்களின் சொந்தக்காரருக்கு தீ, கப்பல் உடைதல் இன்ன பிறவற்றால் வரும் இழப்புகளுக்கு கடல் சாமான் காப்பீடு கட்டாயமாக ஈடு தருகிறது.
  • ஷ்யூரிட்டி பாண்ட் காப்பீடு ஒரு மூன்றாம் நபர் காப்பீடகும். இது முதலின் செயல்பாட்டினை உறுதப்படுத்திக்கொள்ள வழங்கப்படுகிறது.
  • தீவிரவாதக் காப்பீடு தீவீரவாத நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் நஷ்டம் அல்லது சேதாரங்களிலிருந்து காப்பீடு அளிக்கிறது.
  • எரிமலை காப்பீடு ஹவாய் _ ல் எரிமலையிலிருந்து காப்புறுதியளிக்கும் ஒரு காப்பீடாகும்.
  • சூறாவளிக் காப்பீடு என்பது புயல் மற்றும் சூறாவளகளிலிருந்து காப்புறுதியளிக்கும் ஒரு காப்பீடாகும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget