பாரதிராஜாவின் அன்னக்கொடி கொடிவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முல்லைப்பெரியாறு பிரச்னை காரணமாகவும், தற்போது பெப்சி பிரச்னை காரணமாகவும் நின்று நின்று நடப்பது தெரிந்ததே!
தெரியாதது என்னவென்றால், அதில் கதாநாயகனாக நடித்து வந்த இயக்குநர் அமீர் கடந்த சில நாட்களாக பெப்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாலும், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள்
ஆகியோருக்கு சம்பளப் பட்டியல் என ஒன்றினை தன்னிச்சையாக தயாரித்து வெளியிட்டதாலும் பாரதி ராஜாவின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார் என்பது தான்.
இதன் விளைவு, அன்னக்கொடி கொடிவீரன் படத்தில் இருந்து அமீரை தூக்கிவிட்டு வேறு ஒரு ஹீரோவை அமர்த்த இருக்கிறாராம் பாரதிராஜா. இதற்காக ஹீரோவையும் தேடி வருகிறாராம். அநேகமாக அந்த வாய்ப்பு கொடிவீரன் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பத்தில் அரசல்புரசலாக அடிபட்ட பார்த்திபனாக இருக்கலாம் என்கிறது ஒரு தகவல்! மற்றொரு பக்கம் பாரதிராஜா அமீரை தூக்கி விட்டு அன்னக்கொடி கொடிவீரன் கதையையே மாற்றி அமைக்கக் கூடும் என்கிறது கோடம்பாக்கத்தின் ஒரு பட்சி!