சமீபமாகவே சோனி எரிக்சன் நிறுவனம் பற்றிய பேச்சு அடிபடுகிறது. சோனி எரிக்சன் என்ற பெயரில் மொபைல்களை வெளியிட்டு கொண்டு இருந்த சோனி நிறுவனம், இனி சோனி என்ற பெயரிலேயே மொபைல்களையும் வெளியிட உள்ளது. இதன்படி சோனி என்ற பெயரில் வெளியாகும் முதல் மொபைல் எக்ஸ்பீரியா சிரீஸ் ஸ்மார்ட்போன். எக்ஸ்பீரியா எஸ் என்ற ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சோனி எரிக்சன் நிறுவனத்தின் உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
இந்த ஸ்மார்ட்போனில் நேனோ கோட்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சூரிய ஒளிபட்டால் நிறம் மாறும். இந்த தொழில் நுட்பம் யூவி ஆக்டிவ் என்ற பெயரிலும் சொல்லப்படுகின்றது.
இந்த எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில் பேட்டரி வசதிக்கும் ஸ்பெஷல் கவனம் செலுத்தி இருப்பதாக தெரிகிறது. அதாவது 10 நிமிடம் சார்ஜ் செய்தால் போதும், 1 மணி நேரத்திற்கு தேவையான பேட்டரியை பெறலாம். இங்கு கூறப்பட்டுள்ள விவரம் எல்லாம் இன்னும் அதிகார பூர்வமான தகவல்களாக அறிவிக்கப்படவில்லை.
மாற்றங்களை கொடுக்க வரும் இந்த எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனில் வெளியாக இருக்கும் புதுமைகளை இன்னும் கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம்.