எல்லா தமிழ் இயக்குனர்களுக்கும் இந்தியில் ஒரு படம் இயக்கம் வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த ஆசை லிங்குசாமியையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடித்த வேட்டை படம் பொங்கலுக்கு வெளிவந்துள்ளது. படத்துக்கு சரியான வெற்றியும் கிடைத்துள்ளது. இதனால் இயக்குனர் லிங்குசாமி சந்தோஷத்தில் மூழ்கியுள்ளார். இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த லிங்குசாமி தனது திருப்தியை தெரிவித்துக் கொண்டார். வேட்டை இந்தியில்
ரீமேக் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு, சல்மான்கான் மாதவன் வேடத்திலும், ஆர்யா வேடத்தில் ரன்பீர் கபூரும் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதனையடுத்து பாலிவுட்டுக்கு லிங்குசாமி போவரா... பாலிவுட்டிலும் வெற்றி பெறுவாரா என்பதை பொருதிருந்துதான் பார்க்க வேண்டும்.