மனித உடலின் ஆரோக்கியத்திற்கு இன்சுனின் சுரப்பு அவசியமாகும். குறைந்த அளவு இன்சுலின் சுரப்பு உடலின் கொழுப்பை அதிகரித்து உடலை குண்டாக்கிவிடும். எனவே இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் மருத்துவர்கள் ஆலோசனைகள் கூறியுள்ளனர்.
சரியான உறக்கம் தேவை
உடலுக்கும் தரும் ஓய்வுக்கும், ஹார்மோன் சுரப்பதற்கும் தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 24 மணிநேரத்தில் 7 மணி நேரத்தை தூக்கத்திற்கு ஒதுக்கவேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதுவே உடலில் சரியான அளவில் இன்சுலின் சுரக்கச் செய்யும். உறக்கம் குறைபாடு ஏற்பட்டால் மன உளைச்சல் உள்ளிட்ட ஏற்பட்டு இன்சுலின் சுரப்பில் பாதிப்பில் ஏற்படும். நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு இதுவே காரணமாகிறது.
பரிசோதனை கட்டாயம்
நமது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதன்மூலம்தான் அதற்கேற்ப உணவை எடுத்துக்கொள்ள முடியும். இன்சுலின் அளவு சரியாக சுரப்பதற்கு உணவுமுறையும் அவசியம். இதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு கட்டுப்படும்.
திட்டமிடுவது அவசியம்
உணவு திட்டமிடல் அவசியம். தினசரி மூன்றுவேளை உணவு அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும். புரதம், மாவுப்பொருட்கள், காய்கறிகள் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். ஒருவேளை உணவு தவறினாலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை குறைத்து மயக்க நிலையை ஏற்படுத்திவிடும். எனவே சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வது அவசியம்.
இனிப்பு மிகுந்த உணவுகள்
உண்ணும் உணவில் குறைந்த குளுக்கோஸ் உள்ள உணவுகளை கண்டறிந்து உண்ணவேண்டும். காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் போன்றவை குறைந்த குளுக்கோஸ் அளவுள்ள உணவுகளாகும். அது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும். டைப் 2 நீரிழிவு ஏற்படுவதை தடுக்கும்.
நார்ச்சத்து உணவுகள்
மாவுச்சத்துள்ள உணவுகளை உண்பது உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சிரமம் உண்டாகும். எனவே நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது உணவு ஜீரணத்தன்மை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும். மேலும் உடலில் கொழுப்பு அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தும். இது இன்சுலின் சுரப்பையும் கட்டுப்படுத்தும்.
உடற்பயிற்சி அவசியம்
தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு ஏற்றது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். குறைந்த ரத்த அழுத்தம், இதயநோய் போன்றவற்றை தடுக்கும். எடையை கட்டுக்குள் வைத்து இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தும். தொடர்ந்து யோகா செய்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கும்.