தியானம் செய்வது பெண்களின் காதல் உணர்வுகளை அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ப்ரௌவ்ன் பல்கலைக்கழகம் ஒன்று 44 மாணவர்களிடம் ஆய்வு மேற்கொண்டது அந்த ஆய்வில் பங்கேற்ற 44 மாணவர்களில் 30 பேர் பெண்கள். 12 வாரங்களுக்கு தியானம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியின் போது அமைதி, உற்சாகமான, பாலுணர்வை தூண்டும் படங்களை காண்பிக்கப்பட்டது. அப்போது தியானப்பயிற்சி செய்த பெண்கள், ஏராளமானோர் எளிதில் உணர்ச்சி வசப்பட்டனர். மேலும் தியானம் பயிற்சி செய்த பெண்களின் தன்னம்பிக்கை அதிகரித்ததும் ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே தியானம் மேற்கொள்ளும் பெண்களின் கவனச்சிதறல் ஏற்படாமல் இருந்ததும் தெரியவந்ததாக டெய்லி மெயில் நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவு உளவியல் பற்றிய தகவல்களை வெளியிடும் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.