கமல ஹாசனுக்காக விஜய் தனது நண்பன் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். படத்தைப் பார்த்த கமல் விஜய்யை மனதாரப் பாராட்டியுள்ளார்.
இளைய தளபதி விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நண்பர்களாக நடித்த நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாகி ஹிட்டாகியுள்ளது.
இந்த படத்தின் மூலம் தமிழில் மீண்டும் தலைகாட்டியிருக்கிறார் நடிகை இலியானா. இந்தியில் ஆமீர் கான், மாதவன் மற்றும் ஷர்மான் ஜோஷி நடித்து சூப்பர் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் ஷங்கர்.
படம் ஹிட்டான குஷியில் இருக்கும் விஜய் கமலுக்காக தனது படத்தை ஸ்பெஷலாக திரையிட்டுக் காட்டினார். படத்தைப் பார்த்த உலக நாயகன் இளைய தளபதியின் நடிப்பை பாராட்டினார். இதனால் விஜய் படுகுஷியாகிவிட்டார்.
முன்னதாக போக்கிரி படத்தைப் பார்த்த கமல் விஜயை பாராட்டினார். அண்மையில் நடந்த கமல்ஹாசனின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட விஜய் அவருடன் சேர்ந்து நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜீத் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நெருக்கமாக உள்ளார். தற்போது இளைய தளபதி விஜய் கமலுடன் நெருக்கமாகி வருகிறார்.