அதிகமா தொலைகாட்சி பார்த்தா நீரிழிவு வரும்!: மருத்துவர்கள் எச்சரிக்கை!


அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், இதயநோய் பாதிப்பு, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.


அழுது வடியும் அம்மாக்கள்

அழுது வடியும் தொலைக்காட்சி சீரியல்களை காய்கறி நறுக்கியவாறே பார்க்கத் தொடங்கி இரவு படுக்கும்போது கூட கூட அழுது கொண்டே உறங்கிப்போகும் பெண்மணிகள் அதிகரித்து விட்டனர். சீரியல் மோகம் பாடாய் படுத்துவதால் வேறு எந்த சிந்தனையும் ஏற்படுவதில்லை அவர்களுக்கு. பக்கத்து வீட்டிற்கு போனால் கூட சொந்தப்பிரச்சினையை விடுத்து சீரியலில் வரும் காட்சிகளைப் பற்றி பேசுவோர்தான் ஏராளம். இந்த தொலைக்காட்சி மோகத்தினால் பெண்களுக்கு எண்ணற்ற நோய்கள் உடலினுள் அழையா விருந்தாளியாக புகுந்து கொள்வதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.


தினசரி இரண்டு மணிநேரம் தொடர்ந்து டிவி பார்ப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவும், இதயநோயும் வரும் வாய்ப்பு 20 சதவிகிதம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் கர்பிணிகள் டிவி அதிகம் பார்ப்பதால் குறைப்பிரசவம் ஏற்படும் என்படும் மருத்துவர்களின் எச்சரிக்கை.


மாறிவரும் உணவுப் பழக்கம்


டிவியை பார்த்துக்கொண்டே உண்ணும் பழக்கம் மிகவும் பிரச்சினைக்குறியது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய பள்ளி மாணவர்களிடம் இந்த பழக்கம் அதிகரித்துள்ளது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட டென்மார்க் பல்கலைக்கழகம், மாறி வரும் பழக்கத்தினால் தினசரி மூன்று மணிநேரம் தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களுக்கு டைப் 2 நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த ஆய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவர்கள் இந்தியாவில் தொலைக்காட்சி பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னரே நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளனர். இந்த ஆய்வு முடிவு அமெரிக்காவில் இருந்து வெளியாகும் மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget