ஆஸ்கர் எவ்வளவு மிக உயரிய விருது என்பது ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் தெரிந்த விஷயம். இனி ஆஸ்கார் நாயகர்களை தேர்வு செய்ய மின்னணு ஓட்டுப் பதிவு முறையை பயன்படுத்தி வாக்களிக்க ஒரு புதிய தொழில் நுட்ப முறை பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆஸ்கார் நிறுவனமான அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், எல்க்ட்ரானிக் முறையில்வாக்களிக்கும் முறையை உருவாக்க, எவ்ரிஒன் கவுன்ட்ஸ் ஐஎன்சி என்ற நிறுவனத்துடன் இணைவதாக கூறி உள்ளது.
இதற்கு முன்பு ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வு செய்யும் முறையில் வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது மின்னணு ஓட்டுப் பதிவு முறைஇப்படி எலக்ட்ரானிக் சிஸ்டத்தின் மூலம் வாக்களிக்கும் முறை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 85-வது ஆண்டு அகாடமி அவார்டு நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட உள்ளது. இதனிடையே, அடுத்த மாதம் 26ந் தேதி நடைபெற இருக்கும் 84-வது ஆண்டு ஆஸ்கர் அகாடமி விருது வழங்கும் விழா பழைய நடைமுறையிலேயே வாக்குச் சீட்டை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.