ஆசனம் செய்யும் முறைகள்


காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்றதாகும். வானிலை நன்றாக குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், மாலை நேரம் செய்யலாம்.

செய்யும் இடம் சுத்தமாக
காற்றோட்டமான இடையூறு ஏற்படாத இடமாக இருக்க வேண்டும். வெறுந்தரையில் செய்ய கூடாது. ஒரு விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் ஆசனங்களை செய்யவும். வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவு உண்ட பின் 3 – 4 மணி நேரம் கழித்தே ஆசனம் செய்ய வேண்டும்.

எனவே காலை நேரம் செய்தால் நல்லது. மலஜலம் கழித்த பின் ஆரம்பிக்க வேண்டும். யோகாசனங்களுக்கு 15 நிமிடம் முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கவும். உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் குளித்து விட்டு தொடங்கவும். தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணியவும்.
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும், பெண்கள் மாதவிடாய் காலங்களிலிருந்தாலும் ஆசனங்கள் செய்ய வேண்டாம். வெறும் தலைவலி இருந்தால் கூட ஆசனங்கள் செய்ய வேண்டாம். ஆசனங்கள் செய்யும் போது முதலில் எளிய பயிற்சிகளுடன் தொடங்கவும். உடலின் இறுக்கம் குறைய வாம் அப் எனப்படும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஹெர்னியா, ஸியாடிகா இருந்தால் நல்ல யோக நிபுணர் / வைத்தியர் அறிவுரைகளின் பேரில் ஆசனங்களை செய்ய தொடங்க வேண்டும். உடலை வருத்திக் கொண்டு பிடிவாதமாக ஆசனங்களை செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடலின் சக்திக்கேற்ப செய்யுங்கள்.
யோகாசனங்களை செய்யும் போது, எப்போது மூச்சை அடக்குவது, எப்போது மூச்சை விடுவது என்பது மிக மிக முக்கியம். இதை தெரிந்து கொள்வது மிக அவசியம். எவ்வளவு நேரம் ஆசனங்கள் செய்ய வேண்டுமென்பது அவரவர் தேவைகளை பொருத்தது. சராசரியாக 1 மணி நேரம் செய்வது போதுமானது. ஒவ்வொருவருக்கும் வரும் சந்தேகம் இது.
எந்த ஆசனத்தை எவ்வளவு நிமிடம் செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்- என்பன. யோகாவின் போது அவ்வாறு எந்தக் கணக்கும் இல்லை ஒவ்வொரு நிலையிலும் சில நிமிடங்கள் இருக்க வேண்டும் என்ற கணக்கு எதுவும் கிடையாது. சாதாரணமாக சூரிய நமஸ்காரத்தில் ஆரம்பித்து. யோகசனங்களும், பிராணாயாமமும் தொடரும். சவாஸனத்தில் முடிவடையும்.
ஆசனங்கள் முடிந்த பின் தியானம் செய்யவும்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget