சக்ரி டொலட்டி இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படம் பில்லா-2. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, அடுத்த கட்டமாக படத்தின் இதர வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. பில்லா-2 படத்தின் வெளிநாட்டு, உள்நாட்டு விநியோக உரிமையை ஜி.கே மீடியா என்ற விநியோக நிறுவனம்
₨ 51.42 ($1)மில்லியன்(5 கோடி ரூபாய்)க்கு வாங்கி இருப்பதாக தெரிகிறது. அஜித் நடித்த படங்களில், 5 கோடி ரூபாய்க்கு விற்பனையான முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ரஜினி, கமல், சூர்யா படங்கள் மட்டுமே இது போல் விற்பனையாகியிருந்த நிலையில், அஜித் அவர்களுடன் கைகோர்த்துள்ளார். சில காரணங்களால் தன் ரசிகர் மன்றத்தை கலைத்த அஜித், தனது ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரும் ரசிகர்களுடன் நன்றாக பேசி போட்டோ எடுத்துக் கொண்டு அனுப்பி வைப்பதாக தெரிவிக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.