மாடர்ன் டிரஸ் அணிந்து நடிக்கும் குடும்பபாங்கான நடிகையின் பேட்டி


நடிகை காஜல் அகர்வால் மேலாடையின்று அரை நிர்வாணத்தில் “போஸ்” கொடுத்தது போன்ற படம் சமீபத்தில் இண்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-
 நான் குடும்பபாங்கான வேடங்களில் “மாடர்ன் டிரஸ்” அணிந்து நடிக்கிறேன். நான் எப்படிப்பட்ட பெண் என்பது ரசிகர்களுக்கு தெரியும்.
எனது அரை நிர்வாணப் படம் இண்டர்நெட்டில் வெளியானதை பார்தது அதிர்ச்சியானேன். எனது குடும்பத்தினர் வருந்தினர். நான் ரொம்ப வேதனைப்பட்டேன்.

அதுபோல் “போஸ்” கொடுக்கும் பெண் நான் அல்ல. சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். மகேஷ் பாபுவுடன் “பிசினஸ்மேன்” படத்தில் நடித்ததற்காக பாராட்டுகள் குவிகிறது. தமிழில் சூர்யாவுடன் நடிக்கிறேன். இந்தியில் தயாரான “சிங்கம்” படத்தில் நடித்து அங்குள்ள ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளேன்.

இந்தியை விட தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே ஆர்வம் உள்ளது. தென் இந்திய நடிகை என்று சொல்வதையே விரும்புகிறேன். எனது பாதி நேரம் பயணத்திலேயே கழிகிறது. படப்பிடிப்புக்காக சென்னை, ஐதராபாத், மும்பை என விமானத்தில் பறந்து கொண்டே இருக்கிறேன். கஷ்டப்பட்டால்தான் எல்லாம் கிடைக்கும். உழைப்பு இல்லாவிட்டால் பின்தங்கி விடுவோம்.

பணம், சம்பாதிப்பது மட்டுமே எனது நோக்கம் இல்லை. ஆரம்பத்தில் அதுபோன்ற எண்ணத்தில் வந்த படங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு நடித்ததால் பல படங்கள் தோல்வி அடைந்து விட்டன. இப்போது தெளிவாகி விட்டேன். சினிமாவில் நடிகையாக நீடிக்க முடியாது. எனவே விரைவில் ரெஸ்டாரண்ட் துவங்கி ஓட்டல் தொழிலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget