கூகுளின் புதிய முடிவு!


மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினை பெற்று வருகிறது கூகுள் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம். இதில் நிறைய புதிய புதிய அப்ளிக்கேஷன் வசதிகளும் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் சமீப காலமாக ஆன்ட்ராய்டு மார்க்கெட்டில் போலி தொழில் நுட்பங்களும் வெளியாக ஆரம்பித்துவிட்டன. இந்த நிலை நீடித்தால் கூகுள் ஆன்ட்ராய்டு
தொழில் நுட்பத்தின் மேல் உள்ள உயர்ந்த நம்பிக்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் குறைந்துவிடும்.
ஆன்ட்ராய்டு பெயரில் வெளியாகும் இது போன்ற மால்வேர் அப்ளிக்கேஷன்களை தடுக்கும் விதமாக கூகுள் சில முயற்கசிகளை எடுக்க இருக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கும் கூகுள் ஆன்ட்ராய்டு நிறுவனத்திற்கும் இடையில் பாதுகாப்பினை இன்னும் பலப்படுத்தும் விதமாக இருக்கும். இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது கூகுள்.
இது போல் போலியாக தயாரிக்கப்படும் மால்வேர் அப்ளிக்கேஷன்கள் அதிகமான விலை கொண்டதாகவும் இருக்கிறது. இந்த விவரங்களை தோண்டி துருவி பார்க்கையில் கடந்த 2011-ஆம் ஆண்டில் கணிசமான அளவு பணம் வாடிக்கையாளர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலவரத்தை நீட்டிக்கவிட்டால் ஆன்ட்ராய்டு மார்கெட் பாதிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
புதிய தொழில் நுட்பங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கூகுள், மக்களுக்கும் ஆன்ட்ராய்டு மார்கெட்டிற்கும் இடையில் சிறந்த முறையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று கூகுளின் உயர் அதிகாரியான மில்லர் தெரிவித்துள்ளார்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget