மக்களை அதிகம் பயன்படுத்த தூண்டுகின்ற ஃபேஸ்புக், முதன் முறையாக ஷேர்களை வெளியிடுகின்றது. இது ஃபேஸ்புக் பிரியர்களுக்கு மட்டும் அல்ல ஷேர் பிரியர்களுக்கும் ஒரு குஷியான தகவலாக இருக்கும். மொத்தம் 25,000 கோடி ரூபாய் மதிப்பில் ஃபேஸ்புக் ஷேர்களை வெளியிடும்.
குறுகிய காலத்திலேயே ஃபேஸ்புக் இவ்வளவு வளர்ச்சியை பெற்றுள்ள விஷயம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. ஃபேஸ்புக்கில் ஏதேனும் புதிய வசதிகள் வந்தாலே அதை பயன்படுத்த மக்கள் அதிகம் ஆர்வம் கொள்கிற போது, அந்த நிறுவனம் வெளியிடும் பங்குகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஃபேஸ்புக் பங்குகள் வருகிற 5-ஆம் தேதி மே மாதம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.
முதலில் 50,000 கோடிக்கு பங்குகளை வெளியிட முடிவு செய்த ஃபேஸ்புக் இப்பொழுது அதில் பாதி அளவான 25,000 கோடிக்கு மட்டும் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது. ஆனால் ஃபேஸ்புக் 25,000 குறைவாகத்தான் பங்குகளை வெளியிடும் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது. இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.