இந்த வருட காலண்டருக்காக நடிகைகளை போட்டோ எடுத்தார் புகழ்பெற்ற போட்டோகிராஃபர் வெங்கட்ராம். இவர் எடுத்த படங்கள் படுபயங்கரமாக இருந்தன.ஸ்ரேயா முதல் தமிழில் இரண்டு படங்களே நடித்த ரிச்சா வரை யாரையும் விட்டுவைக்கவில்லை.
ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்ற படம் ரிச்சா காங்கோபத்யாயின் படம் தான். அனைத்து போட்டோக்களுடன் ஒப்பிடும் போது அதிக ஓட்டுகளை பெறும் போட்டோவும் அது தான். சென்ற வருடம் விக்ரம், சூர்யா, த்ரிஷா ஆகியோயரை வைத்து வெங்கட்ராம் எடுத்த படமும் செம பாப்புலர்.
அட எப்படி தான் இந்த போட்டொ எடுத்தீங்க! என்று அவரிடம் கேட்டபோது, வெங்கட்ராம் “ ரிச்சா அழகு வற்றாத அருவி. அவங்க என்ன ட்ரஸ் போடுறாங்கன்றது முக்கியம் இல்ல. ஏன்னா? அவங்களுக்கு நல்ல அழகான கண்ணு. அந்த கண்ணு குடுக்குற லுக் தான் ட்ரஸ்ஸுக்கு அழகு.
அந்த ட்ரஸ் யாருக்குமே பொருத்தமா இல்லை. அப்புறம் தான் அவங்க உயரத்துல இருந்த கிளாமரை பாத்துட்டு அவங்களுக்கு அந்த ட்ரஸ் குடுத்தேன். போட்டோவை பாத்துட்டு “என்னை எப்படி சார் இவ்வளவு அழகா போட்டோ எடுத்தீங்க” அப்படினு கேட்டாங்க. அது தான் எனக்கு பெருமையா இருந்துச்சி.” என்று வர்ணித்துக் கொண்டே செல்கிறார் வெஙக்ட்ராம்.