பேஸ்புக் டைம்லைன் பற்றி சில மாறுபட்ட கருத்துகள் வெளி வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் டைம்லைன் வசதியை ஃபேஸ்புக்கில் பயன்படுத்த, ஃபேஸ்புக் அறிவுறுத்தி வருகிறது. டைம்லைன் ஆப்ஷனை பயன்படுத்தினால், ஃபேஸ்புக்கில் நண்பர்களுடன் பரிமாறிய செய்திகளை ஆண்டு வாரியாக வரிசைபடுத்தி பார்க்கலாம்.
இதனால் எந்த ஆண்டு, எந்த தேதியில் பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்தியையும் எளிதாக எடுத்து ஞாபகப்படுத்தி பார்க்கலாம். பலபேரிடம் இன்னும் டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது. இதனால் நினவுகளை புரட்டுவது போல, பக்கங்களை புரட்டி இனிய நினைவுகளை திரும்ப பெறலாம். ஃபேஸ்புக்கில் உள்ள டைம்லைனும் அப்படித்தான்.
இது ஒரு நினைவு பெட்டகம். தகவல் பரிமாற்றங்களை வரிசைப்படுத்தி காட்ட டைம்லைன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்கிறார், ஃபேஸ்புக் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்.