மொபைல் போன் மூலம் விமான டிக்கெட் பெறும் வசதியை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஏர் இந்தியா வாடிக்கையாளர்கள் இனி மொபைல்போன் மூலம் டிக்கெட் பெறலாம். இன்டர்நெட் இல்லாத இடங்களில் இத் திட்டம் சிறந்த பயன் அளிக்கும். ஒரே ஒருமுறை சாப்ட்வேரை டவுன்லோட் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள், இத் திட்டத்தைப் பயன்படுத்தலாம். விமானக் கட்டணத்தை கிரெடிட்,
டெபிட் கார்டுகள் மூலமாகவும், நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம். தேவையான விவரங்களை எஸ்.எம்.எஸ்., மூலம் பெற்றவுடன், விமான டிக்கெட்டின் பி.என்.ஆர்., எண் உள்ளிட்ட தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.