ஆன்ட்ராய்டுக்கு டாடா காட்டுமா? விண்டோஸ்!


ஸ்மார்ட்போன்களுக்காக இதுவரை 70 ஆயிரம் அப்ளிக்கேஷன்கள் விண்டோஸ் போன் மார்க்கெட்டில் வெளியிடப்பட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மைக்ரோசாப்ட். ஸ்மார்ட்போன், டேப்லட், கம்ப்யூட்டர் என்றாலே கூடுதல் வசதிகளுக்காக அவை அளிக்கும் அப்ளிக்கேஷன்கள்தான் அனைவராலும் விரும்பப்படுகிறது.
அந்த வகையில், ஆன்ட்ராய்டு மார்க்கெட்டுக்கு போட்டியாக விண்டோஸ் போன் மார்க்கெட்டும் தற்போது அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.


தற்போது விண்டோஸ் போன் மார்க்கெட்டில் சராசரியாக  நாள் ஒன்றுக்கு 300 புதிய அப்ளிக்கேஷன்கள் வெளியிடப்படுகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் 50 ஆயிரம் அப்ளிக்கேஷன்களாக இருந்த விண்டோஸ் போன் அப்ளிகேஷன் மார்க்கெட் தற்போது 70,000ஐ கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும்
20,000க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் விண்டோஸ் போன் மார்க்கெட்டில் வெளியிடப்பட்டு இருக்கிறது.


அப்ளிக்கேஷன்களை அதிகமாக வெளியிடும் ஆன்ட்ராய்டு நிறுவனத்திற்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கிறது விண்டோஸ் போன் நிறுவனம் என்று கூறலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget