இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், கன்னடா, பெங்காலி என பல மொழி படங்களிலும் கலக்கிய ஸ்னேகா உல்லால் மொழியே இல்லாத படத்திலும் கலக்கியது தான் பரபரப்பு பேச்சாக உள்ளது. ஏதோவொரு போட்டோ ஷூட்டிற்கு போன ஸ்நேகா உல்லால் போட்டோ ஷூட் முடிந்ததும் வெள்ளை நிற மெல்லிய உடையை போட்டுக் கொண்டு அங்கிருந்த கட்டிலில் புரண்டிருக்கிறார்.
இதை அவரது நண்பரான சரத் வீடியோ எடுத்ததை பார்த்ததும் அந்த வீடியோவை வாங்கி பார்த்த ஸ்நேகா உல்லால் உற்சாகத்தில் அதை யூட்யூபில் போட்டுவிட்டார்(வேறு யாரோ போட்டார்கள் என்றும் கூறப்படுகிறது)
இதுவரை அந்த வீடியோவை 1,31,440 நபர்கள் பார்த்திருக்கிறார்கள் (ரசித்திருக்கிறார்கள்). ஸ்நேகா உல்லாலுக்கோ ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவரிடம் அடுத்த வீடியோ எப்போது என ஒரு நண்பர் கேட்டதற்கு “வீடியோவிற்கான பாட்டு முடிவு செய்வதில் கடைசி கட்டத்தில் இருக்கிறோம். வீடியோ எடுப்பதற்கு ஹைதராபாத்தில் நல்ல லொகேஷன் பார்க்க சரத்துடன் செல்வேன். ஆனால் சத்தியமாக சொல்கிறேன் இந்த மாத இறுதிக்குள் அடுத்த வீடியோ ரிலீஸாகிடும்” என்று கூறியிருக்கிறார். இந்த மாத இறுதியில் யூடியூப்பில் பரபரப்பாக தேடப்படும் பெயர் கண்டிப்பாக ஸ்நேகா உல்லால் தான் போலிருக்கே!