ஜீவா நடித்த கோ படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற அஜ்மல் அமீர் விஜய்க்காக எழுதப்பட்ட கதையை தட்டிச் சென்றுள்ளார். இது பற்றி பேசும் போது இயக்குனர் ருத்ரன் “ இந்த கதையை எழுதும் போது நான் விஜய்யை மனதில் கொண்டு தான் எழுதினேன். ஆனால் இந்த கதைக்கு அஜ்மலின் ஆக்ஷன் தான் மிகப் பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.
சமுதாயத்தின் நிலையை மூன்று இளைஞர்கள் எவ்வாறு மாற்றுகிறார்கள் என்பது தான் கதை. அஜ்மல் வெற்றிச்செல்வன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராதிகா ஆப்டே கதாநாயகியாக நடிக்கிறார்” என்று கூறியிருக்கிறார். அப்ப விஜய் மாதிரியே ஆக்ஷன் பண்ண ஒரு ஹீரோ வந்துட்டாரு போல......