இரண்டு பெண்டாட்டிகாரரின் சாயத்தையும் வெளுக்க வைத்துவிட்டது ஃபேஸ்புக். ஆலன் ஓ’நீல் என்பவர் இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ள உண்மையை ஃபேஸ்புக் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. வாஷிங்டன்னை சேர்ந்த இரண்டு பெண்கள் ஃபேஸ்புக்கில் இணைந்ததன் விளைவாக, இந்த இருவரும் ஆலன்
ஓ’நீல் என்பவரையே மணம் செய்துள்ளனர் என்பது அம்பலமாகிவிட்டது.
இவர் 2001-ஆம் ஆண்டு ஒரு பெண்ணையும், 2009-ஆம் ஆண்டு இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது பெண்ணை திருமணம் செய்துள்ள உண்மை ஃபேஸ்புக்கின் மூலம் ஊருக்கு தெரிய வந்துள்ளது.
பல புதிய விஷயங்களுக்காக பயன்பட்டுவரும் ஃபேஸ்புக், இப்படி இரண்டு மனைவியை மணந்த ஒருவரை பற்றிய உண்மையையும் ஃபேஸ்புக் அனைவருக்கும் காட்டிவிட்டது. இனி இரண்டு மனைவியை மணந்துள்ள கதையை ரகசியமாக வைத்து வருபவர்கள் ஃபேஸ்புக்கில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போல் தெரிகிறது.