5. இஷ்டம்
விமல் நடித்திருக்கும் இந்த தெலுங்கு ரீமேக் சந்தானம் இருந்த போதிலும் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 7 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது.
4. வழக்கு எண் 18/9
மூன்று வாரங்கள் முடிவில் இப்படம் சென்னையில் 3.09 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.5 லட்சங்கள்.
3. உருமி
சந்தோஷ் சிவனின் சரித்திரப் படமான உருமி சுமாரான ஓபனிங்கையே பெற்றிருக்கிறது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களில் 9.1 லட்சங்களை வசூலித்துள்ளது.
2. ஒரு கல் ஒரு கண்ணாடி
ஆறு வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் சென்னையில் 16.5 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 16.5 லட்சங்கள்.
1. கலகலப்பு
சுந்தர் சி-யின் படம் இந்த வாரமும் முதலிடத்தில். சென்ற வார இறுதியில கலகலப்புவின் சென்னை வசூல் 69.2 லட்சங்கள். இதுவரை இதன் சென்னை வசூல் 4.04 கோடிகள்.