இணைய தளங்களுக்கு கூகுள் விடுத்த எச்சரிக்கை!


உலகம் முலுவதும் கம்ப்யூட்டர் வைரஸ் காரணமாக வருகின்ற ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக ஆன்லைன் விளம்பரம் ஒன்றை ஹேக்கர்கள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலிருந்து அரசு கம்ப்யூட் டர்களை பாதுகாப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமெரிக்காவின் எப்பிஐ அமைத்தது.


ஆனால் அந்த அமைப்பு ஜுலை 9-ம் தேதி அன்று, தனது பாதுகாப்பு வளையத்தை மூட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.


எப்பிஐ சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு இணையதளத்தை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கம்ப் யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தது.


மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அப்பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.


அவ்வாறு வைரசால் பாதிப்புக்கு உள்ளான கம்ப்யூட்டர்கள் ஜுலை 9-ம் தேதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று கூகுள் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget