இந்த ஆண்டு ஹாலிவுட்டுக்கு மிக சுமாராகத்தான் தொடங்கியது. அதனை மாற்றியமைக்கும் போலிருக்கிறது ஆறு சூப்பர் ஹீரோக்கள் இணைந்து நடித்திருக்கும் தி அவென்ஜர்ஸ். இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் யுஎஸ்-ஸில் மட்டும் 200.3 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கிறது. தி ஹங்கர் கேம்ஸின் வசூலை ஒரே வாரத்தில் கடந்துவிடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த வார பாக்ஸ் ஆஃபிஸில் தி அவென்சர்ஸுக்கு அடுத்த இடத்தில் திங்க் லைக் ஏ மேன் படம் உள்ளது. இப்படம் சென்ற வார இறுதியில் 8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான இதன் யுஎஸ் வசூல் 73 மில்லியன் டாலர்கள்.
இதற்கு அடுத்த இடத்தில் தி ஹங்கர் கேம்ஸ். இதுவரை 381 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் இந்தப் படம் சென்ற வார இறுதியில் 5.7 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
போர் பின்னணியில் அமைந்த காதல் கதையான தி லக்கி ஒன் படம் சென்ற வார இறுதியில் 5.51 டாலர்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இப்படம் 47.9 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.