இரு முறை தாலி கட்டி சினேகாவை மனைவியாக்கினார் பிரசன்னா!

ஸ்னேகா-பிரசன்னா திருமணம்
ஸ்னேகா-பிரசன்னா நிச்சயதார்த்தம் | 
திருமண வரவேற்பு படங்கள்
நடிகை சினேகாவின் திருமணம் இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. அவருக்கு சினேகா வீட்டு முறைப்படியும், தன் பிராமண வீட்டு முறைப்படியும் இரு முறை தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டார் நடிகர் பிரசன்னா. நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தனர்.
நேற்று இருவருக்கும் நிச்சயதார்த்தமும், தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா பேலஸ் திருமண மண்டபத்தில் விமரிசையாக நடந்தது.


இன்று காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் என்று நேரம் குறிக்கப்பட்டிருந்தது. இருவரும் கலப்பு திருமணம் என்பதால், இருவர் சமூக வழக்கப்படியும் சடங்குகள் நடந்தன.


முதலில் சினேகா சார்ந்த நாயுடு வகுப்பு முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. அப்போது மெரூன் நிற பட்டுப் புடவை அணிந்திருந்தார் சினேகா. மணமகன் பிரசன்னா சட்டை அணியாமல், சினேகாவுக்கு தாலிகட்டி மனைவியாக்கிக் கொண்டார். அடுத்து, பிரசன்னாவின் பிராமண வழக்கப்படி திருமணம் நடந்தது. இதற்கென தனி முகூர்த்தப் புடவை எடுத்திருந்தனர். மாம்பழ நிறத்தில் பட்டுப்புடவை அணிந்து வந்த சினேகாவை அவர் தந்தை ஜெயராமன் மடியில் வைத்து தாரைவார்க்க, மீண்டும் தாலி கட்டினார் பிரசன்னா.


திருமணத்துக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். சிவகுமார் குடும்பம், விஜயகுமார் குடும்பம், இயக்குநர்கள் ஹரி, சேரன், பி வாசு, நாசர், நடிகைகள் கே ஆர் விஜயா உள்ளிட்டோர் வந்திருந்து வாழ்த்தினர். 


முன்னணி நடிகர்கள் யாரும் வரவில்லை


ஆனால் தமிழ் சினிமாவின் முதல்நிலை நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட நடிகர் நடிகைகள் திருமணத்துக்கு வரவில்லை.



பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget