ஷார்ஜாவில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கான புதிய ஏடிஎம் இயந்திரத்தை அமைத்திருக்கிறது ஷார்ஜா இஸ்லாமிக் வங்கி. பார்வையற்றோருக்கு பயன்படும் விதத்தில் குரல் வழிகாட்டும் வசதியுடன் இந்த புதிய ஏடிஎம் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தில் பார்வை இல்லாதவர்கள் பயன்படுத்தும் பெரிய ப்ரெய்லி கீபோர்டு, உயர்ந்த
ரிசலூசன் கொண்ட பெரிய டிஸ்ப்ளே, தடிமனமான எழுத்துக்கள், ஹெட்போன் மற்றும் ஸ்பீக்கர் போன்றவை உள்ளன. இதன் மூலம் பார்வை இல்லாதவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை மிக எளிதாக இயக்க முடியும்.
சாதாரண ஏடிஎம்களை இயக்க வேண்டும் என்றால் அந்த இயந்திரம் கேட்கும் நீண்ட வினாக்களுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்த இயந்திரத்தில் அதிகமாக கேள்விகள் வராது. பார்வை அற்றவர்கள் மிக விரைவாக இதை இயக்கும் விதத்தில் இந்த ஏடிஎம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
ஷார்ஜாவில் உள்ள பார்வையற்றவர்களுக்கான எமிரேட்ஸ் அசோஸியேசன் தலைமையகத்தில் இந்த புதிய ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அங்கு இந்த புதிய ஏடிஎம் இயந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் பார்வை இல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சார்ஜாவின் மன்னர் ஷேக் சுல்த்தான் பின் முகமது அல் க்வாசிமியின் கட்டளைப்படி இந்த புதிய ஏடிஎம் சர்ஜா இஸ்லாமிக் வங்கியால் நிறுவப்பட்டிருக்கிறது. நல்ல விஷயம்தான்.