ஏஜென்ட் வினோத் தந்த ஏமாற்றத்தை காக்டெயில் தீர்த்து வைத்திருக்கிறது எனலாம். சைஃப் அலிகான் தீபிகா படுகோன் நடித்திருக்கும் இந்தப் படம் முதல் வாரத்தில் 54 கோடிகளை தாண்டி வசூல் செய்திருக்கிறது. வெளிநாடுகளில் கனத்த அறுவடை. யுகே யில் வெளியான முதல் மூன்று தினங்களில் 73 திரையிடல்களில் 2,95,822 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இது ஏஜென்ட் வினோத்தின் ஓபனிங் வசூலைவிட அதிகம். அதேநேரம் லவ் ஆஜ் கல் ஓபனிங்கைவிட குறைவு. நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 2.51 கோடி.
யுஎஸ் ஸில் முதல் மூன்று தினங்களில் 6,47,956 அமொpக்கன் டாலர்களை வசூலித்துள்ளது. 96 திரையிடல்களில் கிடைத்த இப்பணம் நமது ரூபாய் மதிப்பில் 3.54 கோடிகள். யுனைடெட் அரபு எமிரேட்ஸில் 4.02 கோடிகளையும், ஆஸ்திரேலியாவில் 1.01 கோடியையும் நியூசிலாந்தில் 16.1 லட்சங்களையும் முதல் மூன்று தினங்களில் காக்டெயில் வசூலித்துள்ளது.
இந்த வசூல் தொடர்ந்தால் 100 கோடி என்ற கௌரவ எல்லையை காக்டெயில் தொடுவதற்கு வாய்ப்புள்ளது.