அஜித், விஜய், விக்ரம் என்றிருந்த த்ரிஷா இப்போது விஷாலுக்கு ஜோடி. ரொம்ப நாளா ஆசைப்பட்டேன், இப்போதான் ஜோடி சேர முடிந்தது என்று விஷால் ஏக சந்தோஷத்தில். ஆனால் த்ரிஷா...? இதுவரை விஷாலுடன் ஜோடி சேர்ந்தது பற்றி வாய் திறக்காதவர், மார்க்கெட் போனதால்தான் விஷாலுக்கு இறங்கி வந்திருக்கிறார் என்ற கமெண்டுக்குப் பிறகு விஷால் பற்றி திருவாய் மலர்ந்துள்ளார்.
விஷாலும், நானும் நீண்டநாள் நண்பர்கள். இருவரும் சேர்ந்து நடிக்கணும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் இப்போதுதான் சமர் படத்தில் ஜோடி சேர முடிந்திருக்கிறது. விக்ரம், அஜித் போல விஷாலும் எனக்கு ஏற்ற ஜோடிதான் என்று விஷாலின் சந்தோஷத்தில் மண்ணெண்ணை ஊற்றியிருக்கிறார். சமர் படம் ஆக் ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.