ஜெட் வேகத்தில் உயர்ந்த பருத்தி வீரன் சம்பளம்!


நடிகர் கார்த்தியின் சம்பளம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரூ.14 கோடிக்கு சம்பளம் தருவதாக தயாரிப்பாளர் ஒருவர் கார்த்தியிடம் பேசியுள்ளாராம்.பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, சிறுத்தை, சகுனி ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை. இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது.சிறுத்தை ஒரு ரீமேக்.
ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.
அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம். விஜய், அஜீத்  போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு இந்த சம்பளம் ரூ 20 கோடியில் போய் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். 

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget