கள்ளத்துப்பாக்கி VS துப்பாக்கி தடை நீங்குமா!


விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்துள்ளார். நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் என்ற நிறுவனம் கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறது. 2009-ம் ஆண்டே இந்தப் படத்துக்கு தலைப்பை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இந்த ஆண்டு துப்பாக்கி என்று பெயர் சூட்டினர். இதைத் தொடர்ந்து சென்னை 2-வது உதவி சிட்டி சிவில்
கள்ளத்துப்பாக்கி பட தயாரிப்பாளர்கள், 'விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியான துப்பாக்கி என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். இந்த தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், துப்பாக்கி என்ற தலைப்பில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த ஜுன் 27-ந் தேதி உத்தரவிட்டார்.
இந்தநிலையில், தடையை நீக்கக்கோரி சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "தலைப்பின் பின்பகுதி அல்லது முன்பகுதியை பிறர் பயன்படுத்தக்கூடாது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதுபோல் ஏராளமான உதாரணங்களை கூறலாம்.
மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்றும், நான் துப்பாக்கி என்றும் பதிவு செய்துள்ளோம். இதில் கள்ளத்துப்பாக்கி என்றால், உரிமம் பெறாத துப்பாக்கி என்று அர்த்தம். எனவே தலைப்பில்கூட அர்த்தம் வித்தியாசப்படுகிறது. மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே துப்பாக்கி என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget