மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் சூப்பர் ஹீரோ படம் முகமூடி. இந்தப் படம் மிகவும் பிரம்மாண்ட முறையில் தயாரிக்கப்படுகிறது. பொதுவாகவே மிஷ்கின் இயக்கத்தில் உருவான படங்களில்
ஏதாவதொரு குத்துப்பாட்டு இருக்கும் (நந்தலாலாவைத் தவிர). சித்திரம் பேசுதடி படத்தில் மாளாவிகா மஞ்ச சேலையில் ஆடும் வாளமீனு... பாடல் மிகவும் பிரபலம். அந்த மஞ்ச சேலை செண்டிமெண்டை அடுத்து இயக்கிய படங்களிலும் தொடர்ந்தார் மிஷ்கின்.
அஞ்சாதே படத்தில் 'கத்தாழ கண்ணால...' யுத்தம் செய் படத்தில் 'கண்ணித்தீவு பொண்ணா...' என்று குத்துப் பாடல்கள் இடம்பெற்றது. அந்த பாடல்கள் எல்லாமே ஹிட்டான பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முகமூடி படத்திலும் அப்படி ஒரு மஞ்ச சேலை குத்துப்பாட்டு இருக்கா என்று மிஷ்கினிடம் கேட்டபோது, கண்டிப்பாக இல்லை. இது ஒரு சூப்பர் ஹீரோ படம். மஞ்ச சேலை, குத்து டான்ஸ் எல்லாம் இந்தக் கதைக்கு பொருந்தாது.
படத்தில் டாஸ்மாக் கடையில் வைத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு சரக்கு பாடலை எடுத்து இருக்கிறோம். குத்துப் பாட்டு இல்லாத ஏக்கத்தை இந்த பாடல் தீர்த்துவிடும் என உறுதியாக கூறமுடியும் என்றார்.
மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தின் கண்ணதாசன் காரைக்குடி என்ற சரக்கு பாடல் பிரபலமானதும், அந்த பாடலுக்கு பல விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது. முகமூடி படத்தின் பாடல்கள் வரும் வெள்ளி (20.07.2012) அன்று வெளியாகிறது. பாடல்களை நடிகர் விஜய் வெளியிட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொள்கிறார்.