ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று எளிதாக பார்க்கலாம். பொதுவாக ஸ்மார்ட்போன்களின் திரையில் பேட்டரி போல் இருக்கும் ஐகான் மூலம் தான், நிறைய பேர் பேட்டரியின் ஆற்றலை பார்த்து சார்ஜ் செய்கின்றனர். ஆனால் பேட்டரியின் ஆற்றலை சோதித்து பார்க்க இன்னும் ஓர் சரியான வழிமுறை இருக்கிறது. அந்த எளிய வழி பற்றி பார்ப்போம். ஸ்மார்ட்போனின் மெனு பட்டனை அழுத்த வேண்டும். இதில் செட்டிங்ஸ் என்ற மெனுவிற்குள் செல்ல வேண்டும்.
இந்த செட்டிங்ஸ் என்ற பட்டனை அழுத்தினால் இதற்குள் நிறைய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதை ஸ்குரோல் செய்தால் எபவுட் மெனு என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் பேட்டரி யூசேஜ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் பேட்டரியின் ஆற்றல் எவ்வளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
பேட்டரியின் ஆற்றலை தெரிந்து கொள்வது மட்டும் அல்லாமல் வைபை நெட்வொர்க் வசதிக்கு எவ்வளவு பேட்டரி தீர்ந்திருக்கிறது, டிஸ்ப்ளே வசதிக்கு எவ்வளவு பேட்டரி செலவாகி உள்ளது போன்ற விவரங்களை தெளிவாக பார்க்கலாம்.
இதில் தேவையில்லாமல் அப்ளிக்கேஷனுக்கு பேட்டரி செலவானால், அதற்கு தகுந்த வகையில் அப்ளிக்கேஷன்களை குறைத்தோ அல்லது அகற்றுவதோ (டெலீட்டோ) செய்து கொள்ளலாம்.