விநாயகர் சதுர்த்தி பிரசாத வகைகள்

எந்த ஒரு செயலை தொடங்கினாலும் முதன்மைக் கடவுளான விநாயகரை வணங்கி, பின்னரே எதனையும் தொடங்குவோம். அத்தகைய முழு முதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயக பெருமான் பிறந்த நாளான 'விநாயகர் சதுர்த்தி திருநாள்' நாளை கொண்டாடப் படுகிறது. அந்த நாளன்று அனைத்து வீடுகளிலும் ஒரு பெரிய பண்டிகைப் போல் இருக்கும். ஏனெனில் அந்த நாளன்று அனைவரும், வீடுகளை நன்கு கழுவி, சுத்தம் செய்து, பூஜை அறையை நன்கு அலங்கரித்து, களிமண்ணால் செய்த பிள்ளையாரை
வாங்கி வந்து, அவரை அருகம்புல், எருக்கம்பூ போன்றவற்றால் அலங்கரித்து, அந்த அறையில் வைத்து, வீட்டில் மாவிலைத் தோரணங்கள் கட்டி, கணபதிக்கு பிடித்த இனிப்புகளை வீட்டிலேயே செய்வார்கள்.
பின்னர் அந்த இனிப்புகளை அவருக்கு படைத்து, விநாயகர் துதிகளைப் பாடி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு, வீட்டில் செய்த இனிப்புகளைக் கொடுத்து மகிழ்வார்கள்.
அதிலும் குழந்தைகளுக்கு என்றால் இந்த நாள் மிகவும் சந்தோஷமாக, மகிழ்ச்சியானதாக இருக்கும். ஏனென்றால் வீட்டில் நிறைய இனிப்புக்கள் செய்வார்கள். அதிலும் கொழுக்கட்டை என்றால் போதும், வாயில் நாவூறும். ஆகவே அந்த நாளில், விநாயகரை காரணமாகக் கொண்டு, அதை எந்த ஒரு தடையும் இல்லாமல், நன்றாக சாப்பிடலாம் என்று தான்.
அவ்வாறு வீட்டில் விநாயகருக்கு மிகவும் பிடித்த இனிப்புகளில் சிலவற்றை எவ்வாறு செய்வதென்று பார்த்து, அதை விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் செய்து மகிழ்வோமா!!!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget