சிம்புவும், தனுசும் மேடைகளில் என்னதான் நண்பர்கள் என்று மார்தட்டிக்கொண்டாலும், அவர்களுக் கிடையேயான தொழில் போட்டி என்பது திரைக்குப்பின்னால் தீவிரமாக இருந்து வருகிறது. அந்த வகையில், தனது படங்களில் நடிக்கும் நடிகைகள் தனுஷ் படங்களில் நாயகியாகி விட்டால் செம டென்ஷனாகி விடுவார் சிம்பு. அப்படித்தான் இப்போதும் அவர் டென்சனாகியிருக்கிறார். அந்த டென்சனை அவருக்கு ஏற்படுத்தி விட்டிருப்பவர் ஹன்சிகா.
சிம்புவுடன் வேட்டை மன்னன், வாலு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் சொட்டவாளக்குட்டி என்ற படத்திற்கும் கால்சீட் கொடுத்துள்ளார். இந்த சேதி அறிந்ததும், உடனே ஹன்சிகாவுக்கு போன் போட்டு கேட்டிருக்கிறார். அதற்கு, வாலு படம் முடிந்ததும் தனுசுடன் நடிக்கிறேன். அதோடு, நான் தமிழில் மாப்பிள்ளை படத்தில் தனுசுடன் நடித்துதான் தமிழுக்கே அறிமுகமானேன். அதனால், தனுஷ் படம் என்றதும் என்னால் தவிர்க்க முடியவில்லை. மேலும் நான் வளர்ந்து வரும் நடிகை. ஒரே நடிகரை நம்பியிருக்க முடியாதல்லவா என்றும் நறுக் பதில் கொடுத்து விட்டாராம். இதனால் சிம்புவுக்கு சுருக்கென்று முள் தைத்தது போல் இருக்க, எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நிற்கிறாராம்.