சிம்பு, பிரபுதேவா என்ற இரண்டு நடிகர்களை காதலித்து பின்னர் பிரிந்த போதிலும், கோலிவுட்டில் நயன்தாராவுக்கு இருந்த அதே பழைய மவுசு இன்னும் அப்படியேத்தான் உள்ளது. அவருடன் நடிக்க வேண்டுமென்றால் ஜில்லென்ற ஐஸ் கட்டிகளை தலையில் வைத்தது போல் சிலிர்த்து நிற்கிறார்கள் இளவட்ட ஹீரோக்கள்.
அதோடு காதும் காதும் வைத்தது போல் அவரது படக்கூலி எகிறுவது போல், ஏற்கனவே அவருடன் நடித்த மேல்தட்டு ஹீரோக்களும் மீண்டும் அவருடன் நடிக்கும் ஆவலில் சிபாரிசுகள் செய்து வருகின்றன. இந்த விசயத்தில் ஆர்யா வெளிப்படையாகவே நயனுக்கு சிபாரிசு செய்ய, மற்ற நடிகர்களோ மூடி மறைத்து அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை தங்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் காதில் கிசுகிசுத்து வருகிறார்கள். இதை தெரிந்து கொண்ட நயன்தாரா, சினிமாவில் தனக்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை அறிந்து, தனது இளமையை மினுமினுப்பாக வைத்திருக்க, மாதம் ஒரு முறை கேரளா சென்று ஆயுர்வேத மசாஜ்களை கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.