இன்றைய தேதியில் பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகை கத்ரினா கைப். ஒரே நேரத்தில் அமீர் கான், ஷாருக்கான் என இரு சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து வருகிறார். இதில் அமீர்கான் படமான தூம் 3 யின் படப்பிடிப்பு சிகாகோவில் நடக்கிறது. மொத்தம் 20 நாட்கள் கால்ஷீட். சிகாகோவின் காலநிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறக் கூடியது. படப்பிப்புக்கு எப்போதும் சவாலாக இருக்கும். இது தெரிந்து 4 - 5 நாட்கள் எக்ஸ்ட்ராவாக கால்ஷீட் தரும்படி கேட்டிருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு மாத படப்பிடிப்பு என்பதால் மனைவி,
மகனுடன் தனி அபார்ட்மெண்ட் எடுத்து தங்கியிருக்கிறார் அமீர்கான். கத்ரினாவுக்கும் அதே வசதி செய்து தந்தும், தனி அபார்ட்மெண்டில் தனியாக இருப்பதைவிட ஹோட்டல் பெஸ்ட் என ஹோட்டலில் தங்கியுள்ளார்.
தூம் 3 படப்பிடிப்பு முடிந்ததும் கத்ரினா சுவிட்சர்லாந்து செல்ல வேண்டும். அங்கு ஷாருக்கான் படமான Jab Tak Hai Jaan -ன் பாடல் காட்சி. இந்தப் பாடலை முடித்துவிட்டு நவம்பர் 2 தனது பிறந்தநாளுக்கு ஷாருக்கான் மும்பை திரும்பியாக வேண்டும். இந்த ஷெட்யூல்ட் சரியாக நடக்க சிகாகோவின் வானிலையும், கத்ரினா கைஃபும் ஒத்துழைக்க வேண்டும்.
இரு சூப்பர் ஸ்டார்களின் படங்களின் முன்னேற்றம் இப்போதைக்கு கத்ரினாவை நம்பியே உள்ளது.